ஆடையொட்டி.

மூலிகையின் பெயர் :– ஆடையொட்டி.
தாவரப்பெயர் :– TRIUMFETTA RHOMBOIDEA Jacq.  Syn: Triumfetta angulate Lam.
தாவரக்குடும்பம் :- TILIACEAE  (Malvacea) இதில் 70 வகைகள் உள்ளன.
பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பட்டை, காய் மற்றும் வேர்கள். (சமூலம்) மருத்துவ குணம் உடையவை.
வேறு பெயர்கள் :– ஒட்டுப்புல்லு (Ottuppullu), புறாமுட்டி (Puramutti)
Aadaiotti, Adayotti, Ataiyottippuntu,போன்றவை.
ஆங்கிலத்தில் - Burr Bush, Diamond burrbark, Chinese Burr போன்றவை.
சமஸ்கிரத த்தில் ‘JHINJHARITA’ என்ன்றும் இந்தியில் ‘CHITKI’ என்றும் அழைக்கிறார்கள்.
வளரியல்பு :– ஆடையொட்டி ஒரு செடி வகையாச் சேர்ந்தது. இது எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கும். தமிழ் நாட்டில் மலை, வேலியோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இதன் தாயகம் பிறப்பிடம் தெரியவில்லை. இருந்தாலும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்வான், தென்ஆப்பிரிக்கா, கானா, .டான்சானியா, காமரூன், பிரேசில், இத்தோப்பியா, ஸ்விச்சர்லேண்ட், லிபியா, சைனா, ஜிம்பாவே, பாக்கீஸ்தான், மடகாஸ்கர், அமரிக்கா, உகாண்டா, இலங்கை போன்ற நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்தச் செடி சுமார் ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நேராகச் செல்லும் குத்துச் செடி. இதன் தண்டுகள் மெலிந்திருக்கும், லேசான சொரசொரப்பான முடியுடன் இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் நீழ்வட்டத்தில் பசுமையாக சிறு முடியுடன் இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், சில வகை வெள்ளை, ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும், ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். ஜூலை, மற்றும் ஜனவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். பூ முற்றியதும் அடிபாகத்தில் சூழ் இருக்கும், இது தன்மகரந்தச் சேர்கையால் காய் உண்டாகும். இதன் காய்கள் சிறிதாக மூன்று அரைகள் கொண்டதாக இருக்கும். இந்தக் காய்கள் உலர்ந்தால் ஆடைகள் படும் போது ஒட்டிக் கொள்ளும். இதனால் காரணப்பெயராக அமைந்தது. தமிழ் நாட்டில் தரிசு நிலங்களில் தானாக வளர்ந்தாலும் இதை வெளி நாடுகளில் நல்ல நிலத்தில் பயிராகப் பயர் செய்கிறார்கள்.(மடகாஸ்கர்) விதைமூலம் இன விருத்தி செய்யப்படுகிறது..  
மருத்துவப் பயன்கள் :– ஆடையொட்டியின் தன்மை தட்பம். பிரிவு இனிப்பைச் சேர்ந்தது. செய்கை துவர்ப்பி-லங்கோசகாரி (ASTRINGENT) உள்ளழலாற்று- அந்தர்ஸ்நிகதகாரி (DEMULCENT). இதன் இலை, பூ தொழுநோயை (Leprosy) குணப்படுத்தும், இலையின் பவுடர் இரத்த சோகையைப் (Anaemia) போக்கும். இதை கிழக்கு ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இதன் தண்டு மற்றும் புதிய இலையை அரைத்து உள் கொடுக்க வயிற்றுப் போக்கு (Diarrhoea) குணமாகிறது. வயிற்று வலியும் குணமாகிறது. இதன் அடி வேர்கள் பொடி செய்து உள் கொடுக்க குடல் அல்சர் சூடு (Hot infusion-hasten parturition) குணமடைகிறது. இதன் சமூலத்தில் பிரித்தெடுக்கப்பட்ட ஆல்கலாய்டு ஏண்டி பாக்டீரியாகப் பயன்படுகிறது. இதன் வேர் அரைத்துக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு (Dysentery) குணமாகிறது. வெளிநாடுகளில் குதிரையின் வயிற்றுக் குடலில் புண் அஜீரணம் போன்று ஏற்பட்டால் இதன் இலைகளை நன்கு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து குணம் காண்கிறார்கள். இதன் இலைச் சாற்றிலிருந்து இரசாயனத்தைப் பிறித்தெடுத்து அது TRIUMFEROL 
( 4-HYDROXYISOXAZOLE  -TRIMETHYLSILYLACETARTRAMIA LINN.) இதிலிருந்து எடுக்கப்பட்ட சத்து- TRIUMFETTA BARTRAMIA LINN-Body tempature decrease. (1963) உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இதன் இலைச்சாற்றை பவுடராகவும், வில்லைகளாகவும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.
ஆடையொட்டியின் இலையை அரைத்து நீரில் கலக்கி சர்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க வெட்டை ரோகம் குறைந்து நன்மை ஏற்படும்.
ஆடையொட்டியின் இலை மற்றும் காய் நீரில் அரைத்து நன்கு கலக்கி மூத்திரத் தாரையில் பீச்ச மேற்படி நீர் சம்பந்தமான ரோகங்கள் குணமாகும்.
ஆடையொட்டி இலையையும் பட்டையையும் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுக்க அதிசாரம் அஜீரண பேதி, சீத பேதிகள் குணமாகும்.

ஆடையொட்டி.

மூலிகையின் பெயர் :– ஆடையொட்டி.
தாவரப்பெயர் :– TRIUMFETTA RHOMBOIDEA Jacq.  Syn: Triumfetta angulate Lam.
தாவரக்குடும்பம் :- TILIACEAE  (Malvacea) இதில் 70 வகைகள் உள்ளன.
பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பட்டை, காய் மற்றும் வேர்கள். (சமூலம்) மருத்துவ குணம் உடையவை.
வேறு பெயர்கள் :– ஒட்டுப்புல்லு (Ottuppullu), புறாமுட்டி (Puramutti)
Aadaiotti, Adayotti, Ataiyottippuntu,போன்றவை.
ஆங்கிலத்தில் - Burr Bush, Diamond burrbark, Chinese Burr போன்றவை.
சமஸ்கிரத த்தில் ‘JHINJHARITA’ என்ன்றும் இந்தியில் ‘CHITKI’ என்றும் அழைக்கிறார்கள்.
வளரியல்பு :– ஆடையொட்டி ஒரு செடி வகையாச் சேர்ந்தது. இது எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கும். தமிழ் நாட்டில் மலை, வேலியோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இதன் தாயகம் பிறப்பிடம் தெரியவில்லை. இருந்தாலும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்வான், தென்ஆப்பிரிக்கா, கானா, .டான்சானியா, காமரூன், பிரேசில், இத்தோப்பியா, ஸ்விச்சர்லேண்ட், லிபியா, சைனா, ஜிம்பாவே, பாக்கீஸ்தான், மடகாஸ்கர், அமரிக்கா, உகாண்டா, இலங்கை போன்ற நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்தச் செடி சுமார் ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நேராகச் செல்லும் குத்துச் செடி. இதன் தண்டுகள் மெலிந்திருக்கும், லேசான சொரசொரப்பான முடியுடன் இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் நீழ்வட்டத்தில் பசுமையாக சிறு முடியுடன் இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், சில வகை வெள்ளை, ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும், ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். ஜூலை, மற்றும் ஜனவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். பூ முற்றியதும் அடிபாகத்தில் சூழ் இருக்கும், இது தன்மகரந்தச் சேர்கையால் காய் உண்டாகும். இதன் காய்கள் சிறிதாக மூன்று அரைகள் கொண்டதாக இருக்கும். இந்தக் காய்கள் உலர்ந்தால் ஆடைகள் படும் போது ஒட்டிக் கொள்ளும். இதனால் காரணப்பெயராக அமைந்தது. தமிழ் நாட்டில் தரிசு நிலங்களில் தானாக வளர்ந்தாலும் இதை வெளி நாடுகளில் நல்ல நிலத்தில் பயிராகப் பயர் செய்கிறார்கள்.(மடகாஸ்கர்) விதைமூலம் இன விருத்தி செய்யப்படுகிறது..  
மருத்துவப் பயன்கள் :– ஆடையொட்டியின் தன்மை தட்பம். பிரிவு இனிப்பைச் சேர்ந்தது. செய்கை துவர்ப்பி-லங்கோசகாரி (ASTRINGENT) உள்ளழலாற்று- அந்தர்ஸ்நிகதகாரி (DEMULCENT). இதன் இலை, பூ தொழுநோயை (Leprosy) குணப்படுத்தும், இலையின் பவுடர் இரத்த சோகையைப் (Anaemia) போக்கும். இதை கிழக்கு ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இதன் தண்டு மற்றும் புதிய இலையை அரைத்து உள் கொடுக்க வயிற்றுப் போக்கு (Diarrhoea) குணமாகிறது. வயிற்று வலியும் குணமாகிறது. இதன் அடி வேர்கள் பொடி செய்து உள் கொடுக்க குடல் அல்சர் சூடு (Hot infusion-hasten parturition) குணமடைகிறது. இதன் சமூலத்தில் பிரித்தெடுக்கப்பட்ட ஆல்கலாய்டு ஏண்டி பாக்டீரியாகப் பயன்படுகிறது. இதன் வேர் அரைத்துக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு (Dysentery) குணமாகிறது. வெளிநாடுகளில் குதிரையின் வயிற்றுக் குடலில் புண் அஜீரணம் போன்று ஏற்பட்டால் இதன் இலைகளை நன்கு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து குணம் காண்கிறார்கள். இதன் இலைச் சாற்றிலிருந்து இரசாயனத்தைப் பிறித்தெடுத்து அது TRIUMFEROL 
( 4-HYDROXYISOXAZOLE  -TRIMETHYLSILYLACETARTRAMIA LINN.) இதிலிருந்து எடுக்கப்பட்ட சத்து- TRIUMFETTA BARTRAMIA LINN-Body tempature decrease. (1963) உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இதன் இலைச்சாற்றை பவுடராகவும், வில்லைகளாகவும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.
ஆடையொட்டியின் இலையை அரைத்து நீரில் கலக்கி சர்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க வெட்டை ரோகம் குறைந்து நன்மை ஏற்படும்.
ஆடையொட்டியின் இலை மற்றும் காய் நீரில் அரைத்து நன்கு கலக்கி மூத்திரத் தாரையில் பீச்ச மேற்படி நீர் சம்பந்தமான ரோகங்கள் குணமாகும்.
ஆடையொட்டி இலையையும் பட்டையையும் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுக்க அதிசாரம் அஜீரண பேதி, சீத பேதிகள் குணமாகும்.

ஆடாதொடை

1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும். (அடுத்தமூலிகை தொடரும்)

ஆகாச கருடன் கிழங்கு

ஆகாச கருடன் கிழங்கு.

மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு.
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன


வகைகள் -: இதன் குடும்பத்தில் 16 வகைகள் உள்ளன.
பயன் தரும் பாகங்கள்- இலை மற்றும் கிழங்கு முதலியன.
வளரியல்பு -: ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும்.  இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.

மருத்துவப் பயன்கள் -: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விடம் முறிந்து நோயாளி குணமடைவான்.  விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது.  பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.

இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால்  ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி,  நல்லெண்ணையை விலக்க வேண்டும்.

ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன்  வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண்,  சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து,  குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.

ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி,  அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.

அஸ்வகந்தா


அஸ்வகந்தா.

1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.

2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.

3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.

4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20

6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெருக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.

8) மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி.’

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது

அழிஞ்சில்

அழிஞ்சில்.

1. மூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.

2. தாவரப்பெயர் -: ALANGIUM LAMARCKII,

3. தாவரக்குடும்பம் -: ALANGIACEAE.

4. இன வேறுபாடு -: கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்களையுடையவை வேறுபடும்.

5. பயன் தரும் பாகங்கள் -: வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை முதலியன.

6. வளரியல்பு -: அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20 அடி உயரம் )நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் -: நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

‘ அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சூழாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்ட மெனவறிந்து தேர். ‘

அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும்.

பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்க-ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம். ’

அங்கோலம் என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவை போம்.

அழிஞ்சில்வேர் விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள் நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு வர விரைவில் ஆறும்.

அழிஞ்சி வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும், குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம், விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய், விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு பிடிப்புகளுக்கு நன்று.

அழிஞ்சில் வித்து-

‘ நிகருமிடை மெல்லியலே யித்தரையில்
அழிஞ்சில் வித்த தனாற் சாறுபல-மென்னவெனில்
மறையு மஞ்சனமு மாகும் சன வசியம்
அது செய்திடவே நன்று.’

நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும் உலக வசியமும் உண்டாகும்.

இந்த இனத்தில் சாதாரண அழிஞ்சலுடன் கறுப்பு அழிஞ்சில் என்கிற ஓர் இனமுண்டு. காய் இலை நரம்பு இவற்றில் கறுப்பு நிறமோடியிருக்கும். இதுவே விசேஷமானது. இதன் உபயோகத்தைப் பற்றி அனுபவ சித்தியுள்ள பெரியாரிடமிருந்து கை முறையாக நேரில் கற்றுணர வேண்டியது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள அவா இருப்பின் புலிப்பாணி முதலான மஹரிஷிகளால் கூறப்பட்டுள்ள ஜாலகாண்டங்களில் கண்டறியவும். இதன் வித்துத் தைலத்தைச் சர்ம ரோகத்திறுகும் பூச ஆறும். உள்ளுக்குக் கொடுக்க கப வாதத்தையும் குட்டத்தையும் நீக்கும்.

அறுகம்புல்

அறுகம்புல்.

2.                      தாவரப்பெயர் :- CYNODON DACTYLON.

3.                      தாவரக்குடும்பம் :- POACEAE.

4.                      பயன் தரும் பாகங்கள் :- சமூலம். (முழுதும்)

5.                      வளரியல்பு :- அறுகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடுச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

6.  மருத்துவப் பயன்கள் :- அறுகங்கட்டை உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய்  நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.

கணுநீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கரிம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

அறுகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

அறுகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.

வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சழ் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.

அறுகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். ( மருந்து வீறு கடும் மருந்து களை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்)

அறுகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

ஒரு கிலோ அறுகம் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8  லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம்  பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத எண்ணெயை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.

அறுகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம்  2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.